அரசு உதவி பெறும் பள்ளியில் வேட்டையன், கோட் படங்களை திரையிட்டதாக புகார்

 
GOAT

அரசு உதவி பெறும் பள்ளியில் வேட்டையன், GOAT ஆகிய படங்களை திரையிட்டதாக புகார்  எழுந்துள்ளது.

நெல்லை விகே புரத்தில் அமலி என்ற அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சுமார் 1,700 மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த நவ 9ம் தேதி மதியம் நடிகர் விஜய் நடித்த 'தி கோட்' திரைப்படம் எல்இடி டிவியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதேபோல் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படமும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடித்த வேட்டையன், விஜய்யின் கோட் ஆகிய படங்களை ரூ.25 கட்டணம் பெற்றுக்கொண்டு திரையிட்டதாக புகார் எழுந்துள்ளது. 

இதுதொடர்பாக பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் விசாரணை மேற்கொண்டுள்ளார். மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க திரையிட்டதாக பள்ளி நிர்வாகத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகையை உடனடியாக திருப்பி வழங்க முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.