இயக்குநர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்
திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் மீது பெண் வழக்கறிஞர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து, இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரைகளில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான 'தங்கலான்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் தங்கலான் படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்ககோரி வழக்கறிஞர் பொற்கொடி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் புத்த மதத்தை உயர்வாக கூறுவதற்காக வைணவ மதத்தை இழிவுப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் படத்திற்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்யவும் முடிவு செய்திருப்பதாக பொற்கொடி கூறியுள்ளார்.