“ஜெயலலிதா முன் தீக்குளிச்சிடு”... தற்கொலைக்கு தூண்டிய கேபி அன்பழகம் மீது புகார்

 
கே.பி.அன்பழகன்

தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவுக்கு விளக்கமளிக்க சென்னை காவல் ஆணையருக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இருமொழிகல்வி கொள்கையே தொடரும்: மத்திய அரசுக்கு அமைச்சர் கே.பி. அன்பழகன் கடிதம் | Minister's letter to the Union Minister of Education who  will continue the ...

தர்மபுரி மாவட்டம், மோளையனூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியும், பஞ்சாயத்து முன்னாள்  தலைவருமான கிருஷ்ணமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2011ம் ஆண்டு பஞ்சாயத்து தலைவராக இருந்த போது, டெண்டர் ஒதுக்குவது தொடர்பாக முன்னாள்  அமைச்சர் பழனியப்பனின் உதவியாளர் வேலாயுதம் என்பவருடன் ஏற்பட்ட பிரச்சனையால், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் செல்வாக்கில் தான் பதவியில் இருந்து நீக்கபட்டதாக தெரிவித்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் பழனியப்பனுடன் இருந்த அரசியல் மோதலுக்காக, தன்னை தற்கொலைக்கு முயற்சிக்கும்படி முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் மூளை சலவை செய்ததாகவும், அதன்படி,  தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தீக்குளிக்க முயன்று கைது செய்யப்பட்டு விடுவிக்கபட்டதாக தெரிவித்துள்ளார். அரசியல் லாபத்துக்காக தன்னை தற்கொலைக்கு தூண்டிய கே.பி.அன்பழகன் மீது, வழக்குப்பதிய கோரி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

புகார் அளித்ததால் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கபட்டதாகவும், அதனால் தான் அமைதியாகி விட்டதாகவும் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கே.பி.அன்பழகன் மீது உரிய சாட்சி ஆவணங்களுடன் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன், வழக்கு தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் கோரினார். இதையடுத்து மனுதாரர் அளித்த புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை 22ம் தேதி தள்ளிவைக்கப்பட்டது.