கனிமொழி குறித்து அவதூறு பேச்சு- சசிரேகா மீது புகார்

 
அதிமுக சசிரேகா

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை அவதூறாக பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் சசிரேகா மீது நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

அ.தி.மு.க. நிர்வாகி சசிரேகா மீது புகார் | Complaint against A.D.M.K.  administrator Sasirekha

சென்னை தென்மேற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில்  சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரில், “கடந்த 24.09.24 அன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் திமுக அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்றும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை அவதூறாகவும் கொச்சையாகவும் பேசியது கண்டிக்க தக்கது. அவதூறாக பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் சசிரேகா மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.