ஷேர் ஆட்டோ தடுப்புச்சுவரில் மோதி விபத்து; 3 பேர் பலி!

 

ஷேர் ஆட்டோ தடுப்புச்சுவரில் மோதி விபத்து; 3 பேர் பலி!

தாம்பரத்திலிருந்து பெருங்களத்தூர் சென்ற ஷேர் ஆட்டோ தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.

ஷேர் ஆட்டோ தடுப்புச்சுவரில் மோதி விபத்து; 3 பேர் பலி!

சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் சிக்னல் அருகில் ஷேர் ஆட்டோ அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஷேர் ஆட்டோ , முன்னால் சென்ற பேருந்து மீது மோதுவது போல் கட்டுப்பாட்டை இழந்து சென்றுள்ளது. இதனால் பேருந்து மீது மோதாமல் இருக்க ஆட்டோ ஓட்டுநர் வண்டியை வலப்பக்கமாக திருப்பியபோது ஆட்டோ தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

ஷேர் ஆட்டோ தடுப்புச்சுவரில் மோதி விபத்து; 3 பேர் பலி!

இதில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐசக்ராஜ் (51), உத்திரமேரூரைச் சேர்ந்த சுந்தரராஜன் (37), பாண்டிச்சேரியை சேர்ந்த நாகமுத்து (36), ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஏழுமலை (65), ரஜினிகாந்த் (45), ஆனந்த்குமார் (27), ஆகிய மூவர் பலத்த காயங்களுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் நிலையில், குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.