கோவை மாணவி தற்கொலை : பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி உத்தரவு!

 
dpi

கோவை மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தர பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

sexual abuse

கோவை கோட்டைமேடு ஆர்.எஸ். புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் கடந்த 11ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இந்த விவகாரத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு,  தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனை கைது செய்ய கோரிக்கை வலுத்தது. இதனடிப்படையில்  பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் போக்ஸோ மீது சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த சூழலில் பெங்களூரில் தலைமறைவாக இருந்த  தலைமை ஆசிரியை மீரா ஜாக்சனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

p

இந்நிலையில் மாணவியின் தற்கொலை குறித்து முதன்மை கல்வி அலுவலர் முழுமையாக விசாரணை நடத்தி அதன் பிறகு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வி துறை கூறியுள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வரும் 23ஆம் தேதி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்திற்கும் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

anbil-mahesh-3

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அன்பில் மகேஷ்,  அனைத்து பள்ளிகளிலும் வரும் காலங்களில் பெண் ஆசிரியர் தலைமையில் மேலாண்மை குழு அமைக்கப்படும். குற்றம் செய்பவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.  இதுபோன்ற பாலியல் சீண்டல் புகார் தொடர்பாக அனைத்து கல்வி நிலையங்களும் ஹெல்ப்லைன் புகார் வைக்கப்பட்டுள்ளது.  அது தொடர்பாக மாணவர்களுக்கு முழுமையான விழிப்புணர்வு இல்லை. பள்ளிகள் முழுமையாக திறந்தபிறகு ,   விழிப்புணர்வுமாணவர்களுக்கு ஏற்படுத்தப்படும் என்றார்.