"அவரு மன்னிப்பு கேட்கும்போது எடுத்த வீடியோ அவரோட அனுமதியோட எடுத்தாங்களா?"- கோவை எம்பி

 
coimbatore mp

கோவை மக்களையே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  அவமானப்படுத்திவிட்டார் என கோவை திமுக எம்.பி. கணபதி ராஜ்குமார் சாடியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கோவை திமுக எம்.பி. கணபதி ராஜ்குமார், “ அன்னபூர்ணா உரிமையாளரை அவமானப்படுத்துவது கோவை மக்களை அவமானப்படுத்துவதற்கு சமம். அங்கிருக்கும் தொழில் அமைப்பினர் இனி கேள்வி எழுப்ப முன் வருவார்களா? பெண் எம்.எல்.ஏவை அவமதித்துவிட்டதாக கூறி வானதி சீனிவாசன் பிரச்சனையை திசைத்திருப்ப பார்க்கிறார். சாதி, மதம், ஆண்- பெண் இவற்றை பிரித்தாளுவதே பாஜகவினரின் வேலை. உணவக உரிமையாளர் சீனிவாசனை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். யாரும் கேள்வி கேட்க கூடாது என்றால், எதற்காக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில், யார் என்ன சாப்பிடுகிறார்கள் என தெரியாதா? மன்னிப்பு வீடியோவிற்கு பின் பெரிய கூட்டமே உள்ளது.

அனைத்து ஹோட்டல் உரிமையாளர் சார்பாகவே சீனிவாசன் பேசினார். நடந்தது தவறு என பாஜகவினர் புரிந்து கொண்டுள்ளனர். ஜிஎஸ்டியில் உள்ள முரண்களை தெளிவாக சீனிவாசன் எடுத்துரைத்தார்” என்றார்.`