கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல்!

 
periyasamy

தமிழ்நாடு முழுவதும் 20 ஆயிரம் பேர் கூட்டுறவு தேர்தலில் தேர்வான நிலையில்,  கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய இன்று சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் ஆகிறது.

stalin

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இறுதி நாளான இன்று ஆளுநர் உரைக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றுகிறார். இந்நிலையில் அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேர்தலை ரத்து செய்து அதற்கான சட்ட முன்வடிவை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார். கடந்த 2018ஆம் அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் தேர்வான நபர்களின் பதவிகாலம் 2023 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில் அதை ரத்து செய்து இன்று மசோதா தாக்கல் ஆகிறது.

periyasamy

பல்வேறு மாவட்டங்களில் நகை கடன் என்ற பெயரில் கூட்டுறவு சங்கத் சங்கத் தேர்தலில் தேர்வான நபர்கள் மூலம் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. நகைகள்  இல்லாமல் கடன் வழங்கி இருப்பதும், போலி நகைகளை வைத்து நகை கடன் வழங்கப்பட்டிருப்பதும் கடந்த சில மாதங்களில் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் , கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய சட்ட பேரவையில் இன்று மாதங்கள் ஆகிறது குறிப்பிடத்தக்கது.