திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
ttn

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

stalin

சாதனைகளால் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும் திமுகவின்  வேட்பாளர் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும்  அன்னியூர் சிவா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்நிலையில் ஜூலை 10ம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக வீடியோ வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 



 

அதில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை வெற்றி பெறச் செய்யுங்கள். வன்னியர்களுக்கு 20% உள் ஒதுக்கீடு வழங்கியது திமுகதான்” வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 20%உள்ஒதுக்கீடு வழங்கியது திமுக ஆட்சி; 1987 போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் பலியான போராளிகளுக்கு நினைவு மண்டபம் கட்டப்படுகிறது  சமூக நீதிக்கு எதிரான பாஜக கூட்டணியை தோற்கடிப்பதன்மூலம் சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்!” கூறியுள்ளார்.