மகாத்மா காந்தியின் உருவபடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

 
stalin

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவபடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

தேச தந்தை மகாத்மா காந்தி நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இதேபோல் தேசிய தலைவர்கள் முதல் மாநில தலைவர்கள் வரை அனைவரும் அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், மகாத்மா காந்தியின் உருவபடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தி நினைவு தினத்தை ஒட்டி, எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் காந்தி உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.