அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
Feb 3, 2025, 10:18 IST1738558111164

அண்ணா நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பேரறிஞர் அண்ணாவின் 56ஆவது நினைவு தினத்தையொட்டி அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செய்தார். வாலாஜா சலையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை பேரணியாக வந்து மரியாதை செலுத்தினார். மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் மரியாதை செய்தார்.