அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

 
stalin

சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். 

இதனை தொடார்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கைப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு அது குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அது உங்களுக்கு நன்றாக தெரியும். நேற்றிரவு கடுமையான மழை பெய்திருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்று இரவு புயல் கரையை கடக்கும் என்று செய்தி வந்திருக்கிறது.

இந்நிலையில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர், காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தொடர்புகொண்டு அங்கிருக்கக்கூடிய நிலவரங்களை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டோம். நிவாரணப் பணிகள் எந்தளவிற்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டோம். நிவாரண முகாம்கள் எல்லாம் ஆங்காங்கு அமைக்கப்பட்டு மக்களும் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். உணவும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று இரவு நிச்சயமாக கடுமையான மழை பெய்யும் என்கின்ற காரணத்தால், முழுமையான நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று நாங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருக்கிறோம் என கூறினார்.