முதல்வர் பாதுகாப்பு கருதி ட்ரோன் கேமராக்களுக்கு தடை

 
s

முதல்வர் வருகையால் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.   முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு செல்வதால் அவர் வருகையை முன்னிட்டு கோவை மாநகராட்சி பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

 கோயம்புத்தூரில் நாளை அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.  முதல்வர் ஸ்டாலின் இதில் பங்கேற்பதற்காக நாளை கோவை செல்கிறார்.   முதல்வரின் கோவை வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது .  இந்தநிலையில் பாதுகாப்பு காரணம் கருதி கோவை மாநகர எல்லைக்குள் ட்ரோன் கேமரா பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது .

t

இது தொடர்பாக கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,  தமிழக முதலமைச்சர் 22 மற்றும்  23 ஆகிய தேதிகளில் கோவை வருகிறார்.  இதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கண்ட தினங்களில் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது . மாநகர பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்படுகிறது என்று கூறப்பட்டிருக்கிறது.