தூய்மை பணியாளர் மகள் நகராட்சி ஆணையர்... தந்தையின் கனவை நனவாக்கிய மகள்!
மன்னார்குடியைச் சேர்ந்த தூய்மை பணியாளரின் மகள் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.
தான் தூய்மைப்பணியாளராக இருந்தாலும், தன் மகளை நகராட்சி ஆணையராக்கி பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டார் மன்னார்குடியை சேர்ந்த சேகர். 2015 ஆம் ஆண்டு திருமணம் முடிந்து 2 குழந்தைகளுக்கு தாயான நிலையிலும் தனது தந்தையின் கனவை விடாது துரத்தி குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளார் மகள் துர்கா. அதற்கான பணியாணையை முதலமைச்சரிடம் இருந்து துர்கா பெற்றுக்கொண்டார். துர்காவின் தாத்தாவும் தூய்மை பணியாளர் என்பது குறிப்பிடதக்கது.
நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் திருமிகு துர்கா அவர்களின் பேட்டியைக் கேட்டு அகமகிழ்ந்தேன்!
— M.K.Stalin (@mkstalin) August 12, 2024
கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்குத் திருமிகு துர்கா அவர்களே எடுத்துக்காட்டு!
நான் மீண்டும் சொல்கிறேன்…
கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து!… https://t.co/1W8OOtPwg5
துர்காவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் திருமிகு துர்கா அவர்களின் பேட்டியைக் கேட்டு அகமகிழ்ந்தேன்! கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்குத் திருமிகு துர்கா அவர்களே எடுத்துக்காட்டு நான் மீண்டும் சொல்கிறேன்…
கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து!” என டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.