சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே தகராறு!
காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது பிரபந்தம் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டது. யார் முதலில் பிரபந்தம் பாடுவது என வடகலை, தென்கலை பிரிவினர் இடையே கோவில் வளாகத்திலேயே தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்கலை பிரிவினர் முதலில் பாட அனுமதி உள்ள நிலையில், வடகலை பிரிவினர் நாங்களும் பாடுவோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையை அடுத்து இரு தரப்பினரும் பாடினர். விழாக்களின்போது வடகலை, தென்கலை பிரிவினர் தகராறில் ஈடுபடுவதால் பக்தர்கள் முகம் சுளித்தனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.