இளையராஜாவை வம்பிழுக்கும் சின்மயி! லீனாவை வஞ்சம் தீர்த்தாரா சுசிகணேசன்?

 
ர்

 பத்திரிகையாளராக இருந்து பின்னர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றிய பின்னர் விரும்புகிறேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுசிகணேசன்.   பைவ் ஸ்டார்,  கந்தசாமி,  திருட்டுப் பயலே,  திருட்டுப்பயலே -2 படங்களை இயக்கிய பின்னர் தற்போது அவர் வஞ்சம் தீர்த்தாயடா என்கிற படத்தை இயக்க இருக்கிறார்.   இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார்.

ர்ர்

 சுசி கணேசன் படத்திற்கு இளையராஜா இசை அமைப்பதற்கு பின்னணி பாடகி சின்மயி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உலகமெங்கும் மீடூ  என்கிற ஹேஷ்டேக் மிக பிரபலமாக இருந்தது.   மீடூ மூலமாக பெண்கள் பலவற்றைச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர்.  அப்படித்தான் வைரமுத்து எழுதிய ஒரு தெய்வம் தந்த பூவே பாடலின் மூலம் அறிமுகமான பாடகி சின்மயி,  வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து தமிழ் திரையுலகை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

 ஆதாரப்பூர்வமாக குற்றச்சாட்டை நிரூபிக்க வில்லை என்றாலும் வைரமுத்து தொடர்பான எந்த நிகழ்வுகள் கேள்விப் பட்டாலும்,  படித்தாலும் உடனே அந்த பாலியல் குற்றச்சாட்டை முன்னெடுத்து பேசிவருகிறார் சின்மயி.  அந்த பிரச்சனை இன்றுவரைக்கும் ஓய்ந்தபாடில்லை.

 சின்மயி மீடூவில் பேசிய பின்னர் அடுத்தடுத்து சில பெண்கள் பேசி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இயக்குனர் சுசி கணேசன் மீது கவிஞரும் ஆவணப்பட இயக்குனருமான லீனா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.  இதில் கடுப்பான சுசிகணேசன் அப்படி ஒன்றுமே நடக்கவில்லை என்று கொதித்தெழுந்தார்.

 தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தி விட்டார் என்று அவர் நீதிமன்றத்திற்கும் சென்றார்.   அந்த வழக்கு இன்னமும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.   இந்த வழக்கில் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருக்கிறது .   அதை மீட்க பாஸ்போர்ட்டை மீண்டும் தரவேண்டும் தான் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் கேட்டு  வாதாடி வருகிறார் மணிமேகலை.

ட்ட்

 இந்தநிலையில் சுசிகணேசன் படத்திற்கு இளையராஜா இசை அமைப்பதற்காக லீனா மணிமேகலை விவகாரத்தை எடுத்து பேசியிருக்கிறார்  சின்மயி.  ’’ஆஹா, வஞ்சம் தீர்த்தாயடா லீனா மணிமேகலையை. ஒரு பெண்ணை துஸ்பிரயோகம் செய்தவர் உடன் பணியாற்றுகிறோம் என்பது ராஜா சாருக்கு தெரியாதா அல்லது அவரது குழுவினருக்கு தெரியாதா’’ என்ற கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதனால்,  ஏற்கனவே லீனா மீது வழக்கு தொடுத்திருக்கும் சுசிகணேசன், சின்மயி மீதும் நடவடிக்கை எடுப்பாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மீடுவில் இளையராஜாவை வம்பிழுக்க வேண்டாம் என்று அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.