மாணவியை மிரட்டிய கெமிஸ்ட்ரி பாடம்... கட்சி எல்லை கடந்து வராவிட்டால் குழந்தைகளை காக்க முடியாது

 
th

பள்ளி மீதுதான் எனக்கு சந்தேகம் என்று தெரிவித்துள்ளார் தற்கொலை செய்துகொண்ட கரூர் மாணவியின் தாயார்.  அவர்  மேலும்,  என் மகள் உயிரிழ்ந்த பின்னர் போலீசில் புகார் கொடுக்க சென்றோம்.    போலீசார் எங்கள் உறவினர்கள் மூன்று பேரையும் தாக்கியதோடு, என்னையும் விடியற்காலை 5 மனி வரைக்கும் போலீஸ் ஸ்டேஷனிலேயே உட்கார வைத்துவிட்டனர் என்கிறார்.

 காலையில்  10 மணிக்கு பிரேத பரிசோதனைமுடிந்த  பிறகும்  எங்களை பாப்பா முகத்தை பார்க்க விடாமல் வேக வேகமாக வாகனத்தில் ஏற்றுக்கொண்டு சென்றுவிட்டார்கள். இதனால் எனக்கு பள்ளிமீதுதான் சந்தேகமாக இருக்கிறது என்கிறார்.

பாப்பாவோட காரியங்களை முடித்துவிட்டீற்கு வந்த பிறகுதான் கெமிஸ்ட்ரி பேப்பர் எல்லாம் கிழித்து போட்டு இருந்ததை பார்த்ததும் எங்களுக்கு சந்தேகம் வந்தது என்று சொல்லும் மாணவியின் தாயார்,  கெமிஸ்ட்ரி பாடம் வரும் நாளில் எல்லாம்  பள்ளிக்கு செல்ல பயந்தாள் பாப்பா.  ஆசிரியர் ஒருவர் தகாத வார்த்தையை அதிகம் பயன்படுத்தி மாணவர்களை திட்டுவார் என்று சொல்லி பயப்படுவாள். அதனால்தான் எனக்கு பள்ளி மீதுதான் சந்தேகம் வந்தது  என்று தெரிவித்திருக்கிறார்.

b

இதற்கு மே-17 இயக்க திருமுருகன்காந்தி,   கரூரில் இறந்த மாணவியின் உறவினர்களிடத்தில் தகாதமுறையில் நடந்து கொண்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், வழக்கு பதியவில்லை. மேலும் மாணவி இறப்பிற்கு காரணமானவர் கண்டறியப்பட்டு கைது செய்யப்படவேண்டும் என்கிறார். 

மேலும்,   நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை இல்லையெனில் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே தொடரும்.   இதுபோன்ற அநீதிகள் சாமானிய மக்களுக்கும், எதிர்கால சந்ததிகள் மீது நடக்குமிடங்களில் நாம், கட்சி எல்லை கடந்து நீதி கேட்காவிடில் குழந்தைகளை காக்க முடியாது. இது போன்ற பாலியல் தொல்லைகள் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவருகின்றன. இந்நிகழ்வுகளைதொடர்ந்து கவனமெடுத்து நீதிகேட்க அணியமாவோம். வலிமைய ற்றவர்களுக்காக குரல் கொடுக்கும் கடமையும், கேள்வி கேட்கும் பொறுப்பும் நம் அனைவருக்கும் உண்டு என்பதை அறிவுறுத்துகிறார்.