செஸ் ஒலிம்பியாட்- வெற்றியை குவிக்கும் இந்திய அணி

 
Praggnanandhaa

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பி பிரிவில் விளையாடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா வெற்றியடைந்தார்.

எஸ்டோனியா அணிகளுக்கு எதிரான கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 41வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதேபோல் இந்திய பி அணியில் விளையாடிவரும் தமிழக வீரர்கள் அதிபன், குகேஷ் ஆகியோரும் வெற்றிப்பெற்றுள்ளானர். மால்டோவா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஹரிகிருஷ்ணா, நாராயணன் வெற்றி பெற்றுள்ளனர். 

செஸ் ஒலிம்பியாட் இந்திய பெண்கள் ஏ பிரிவில் அர்ஜெண்டினாவுக்கு எதிராக விளையாடிய தான்யா வெற்றி வாகை சூடினார். வெள்ளை நிற காய்களைக் கொண்டு விளையாடிய தான்யா 31வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மேலும் மகளிர் பிரிவில் இந்திய அணியில் நந்திதா, சிங்கப்பூர் வீராங்கனையை வீழ்த்தினார்.  இதன்மூலம் மகளிர் பிரிவில் இந்திய பி, சி, அணிகளுக்கு இரண்டாவது வெற்றி கிடைத்துள்ளது.