16 கிலோ மெத்தபெட்டமைன் கடத்தல் வழக்கு! - அதிர்ச்சி தரும் தகவல்கள்!

 
smugling

சென்னை மாதவரத்தில் 16 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


சென்னை மாதவரத்தில் 16 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 21ஆம் தேதி ரோஜா நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் திருவல்லிக்கேணியை சேர்ந்த கார்த்திக் கைது முதலில் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட வெங்கடேசனின் மனைவி ஜான்சியும் கைது செய்யப்பட்டார். 

இந்த நிலையில், அந்த கும்பல் அருப்புக்கோட்டையில் ஆய்வகம் அமைத்து போதைப்பொருள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூலப்பொருட்களை வாங்கி வந்து ஆய்வகத்தில் வைத்து போதைப்பொருள் தயாரித்த அருப்புக்கோட்டையை சேர்ந்த முருகன், லட்சுமி நரசிம்மன் கைது செய்யப்பட்டுள்ளனர்.  டெல்லி, ஹரியானா, மணிப்பூரில் முகாமிட்டு போதைப்பொருள் நெட்வொர்க்கை  மாதவரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  இதுவரை மொத்தம் 17.8 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், 10 பேர் கைதாகியுள்ளனர். தொடர்ந்து ஹரியானா, டெல்லி, மணிப்பூரில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர்.