"வேலைவாய்ப்பு; பொய் விளம்பரம்.. ஏமாந்தா நாங்க பொறுப்பல்ல" - மெட்ரோ எச்சரிக்கை!

 
சென்னை மெட்ரோ

நாட்டில் சில ஆண்டுகளாகவே வேலைவாய்ப்பின்றி இளைஞர்கள் தவித்து வருகின்றனர். அவர்களின் ஏக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒருசில கும்பல் போலியான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு இளைஞர்கள் வைத்திருக்கும் கொஞ்சமான பணத்தையும் ஆட்டையைப் போடுகின்றனர். அப்படி தான் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை இருப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. இதனை நம்பி இளைஞர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Chennai metro to resume services from September 7: All you need to know -  India News

தற்போது இதனை பொய்ச்செய்தி எனக்கூறி மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஏதேனும் வேலைவாய்ப்பு இருப்பின் அதற்கான முன்-அறிவிப்பை www.chennaimetrorail.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதைத் தவிர தினசரி தமிழ் நாளிதழ், ஆங்கில நாளிதழ்மற்றும் வேலைவாய்ப்பு அறிவிப்புதாள்களிலும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. metro

இதைத் தவிர வேறு எந்தவொரு இணையதளத்திலும் வரும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலைவாய்ப்பு செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். இந்நிறுவனத்தின் பல்வேறு வேலை வாய்ப்புகள் இருப்பதாக பொய்யான இணையத்தளத்தில் செய்திகளை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொய்யான இணையத்தளத்தில் வெளியாகும் செய்திகள், விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாந்தால் இதற்கு எந்த விதத்திலும் இந்நிறுவனம் பொறுப்பேற்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.