நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!

 

நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!

தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி நாளை சென்னையில் ரயில் இயக்கங்களின் இயக்கங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் புறநகர் ரயில் சேவையை தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சாமானிய மக்கள் பலரும் பயன்பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த சூழலில் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அத்துடன் அரசுக்கும் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது மக்கள் பயணிக்க ஆரம்பித்தனர்.அத்துடன் பண்டிகை காலங்களில் ரயில் சேவை இயக்கப்பட்டாலும் குறைவான ரயில்களே இயக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!

இந்நிலையில் தமிழ் புத்தாண்டு நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் -அரக்கோணம், சென்னை சென்ட்ரல் -கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை ,சென்னை கடற்கரை -வேளச்சேரி, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, திருமால்பூர் ஆகிய வழித்தடங்களில் 449 புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.