சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பரவலாம மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் வழகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று பிற்பகலில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில், இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்நிலைகளில் உள்ள நீரின் அளவு குறித்த நிலவரம் வெளியாகியுள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2463 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 312 மில்லியன் கன அடியாக உள்ளது.


