மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் மற்றும் அவரது தாயார் மீது தனியார் மருத்துவர் போலீசில் புகார்!

 
doctor issue

சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீதான கத்திக்குத்து விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்புவதாக லோகேஷ், அவரது தாயார் பிரேமா மீது  தனியார் மருத்துவர் ஜேக்கலின் மோசஸ் புகார் அளித்துள்ளார். 

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சென்னை கிண்டி மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்று நோயியல் மருத்துவர் பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தினார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞர் லோகேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். தனது தாய் பிரேமாவுக்கு பாலாஜி முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி லேகேஷ் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர். 

இந்த நிலையில், மருத்துவர் பாலாஜி மீதான கத்திக்குத்து விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்புவதாக லோகேஷ், அவரது தாயார் பிரேமா மீது தனியார் மருத்துவர் ஜேக்கலின் மோசஸ் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அரசு மருத்துவர் பாலாஜி சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என தான் தெரிவித்ததாக அவதூறு பரப்புவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், நுரையீரல் தொடர்பான பிரச்சினைக்கு 3 முறை தன்னிடம் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டதாக விளக்கம் அளித்துள்ளார். தனது அறிவுறுத்தலின் பேரிலேயே கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பிரேமா அனுமதி என்றும் கூறியுள்ளார்.