பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விமானங்களில் பல மடங்கு கட்டணம் உயர்வு!

 
domestic flights

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. 

பொங்கல் பண்டிகை வருகிற 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வசித்து வரும் மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இதனிடையே பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டனம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளது. 

சென்னை - மதுரை இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,999 வசூலிக்கப்படும் நிலையில், தற்போது 17,645 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை - திருச்சி இடையே வழக்கமான கட்டணம்  ரூ.2,199 வசூலிக்கப்படும் நிலையில், இன்றைய கட்டணம் .14,337 ரூபாயாக உள்ளது. சென்னை - கோவை இடையே 
வழக்கமான கட்டணம் ரூ.3,485 வசூலிக்கப்படும் நிலையில், இன்றைய கட்டணம் ரூ.16,647ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தூத்துக்குடி இடையே வழக்கமான கட்டணம் ரூ.4,199 ஆக இருந்த நிலையில், இன்றைய கட்டணம் ரூ.12,866 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.