புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடல்!

 
airport

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் நண்பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, கிண்டி, அடையாறு, ஆலந்தூர், வேளச்சேரி, தரமணி, திருவானியூர், மந்தைவெளி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மெரினா உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக பல்வேறு இடங்களிலும் குடியிருப்புகளை மழைநீர் சூழுந்துள்ளது. சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். 

இந்த நிலையில், சென்னை விமான நிலையம் இரவு 7 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் நண்பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கி விமானங்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விமான நிலையம் மூடப்படுகிறது. முன்னதாக புயல், கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.