காதலிக்க வற்புறுத்தி பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொலை மிரட்டல் - 2 பேர் கைது!
சென்னை யானைகவுனி பகுதியில் காதலிக்க வற்புறுத்தி 19 வயது இளம்பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் மற்றும் அவரது கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை யானைகவுனி பகுதியை சேர்ந்த அர்ஜூன் என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் அர்ஜூனின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது. இது தொடர்பாக பலமுறை அந்த பெண்ணை வற்புறுத்தியும் அந்த பெண் கேட்கவில்லை. இந்த நிலையில், ஆத்திரம் அடைந்த அர்ஜூன் காதலிக்க வற்புறுத்தி 19 வயது இளம்பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக காவல் நிலையத்தில் இளம்பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு ப் பதிவு செச்ய்த போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் என்பவரை கைது செய்தனர். சம்பவத்தின் போது அர்ஜுனுடன் இருந்த ஜேம்ஸ் (20) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.