திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி- வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 6,000 கன அடி தண்ணீர் திறந்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளது.
கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து 22 அடியை தாண்டிய நிலையில், தொடர்ந்து ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதாலும் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 6,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக குன்றத்தூர்- ஸ்ரீபெரும்புதூர் சாலையை மூழ்கடித்து வெள்ளம் குடியிருப்புக்குள் புகுந்தது.
அதேபோல் பாம்பு,பூரான்,அட்டை என விஷ ஜந்துகளும் வீடுகளுக்குள் படையெடுத்து வருகிறது. செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுவருவதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.