அடுத்த 3 மணிநேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 
rain

தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாமக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் கன மழை கொட்டி தீர்த்தது.  குறிப்பாக  மயிலாப்பூர் ,திருவல்லிக்கேணி, தியாகராய நகர், தேனாம்பேட்டை ,வடபழனி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.

rain

நாளை தூத்துக்குடி ராமநாதபுரம் ,கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதனால் இந்த மாவட்டங்களில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,விழுப்புரம் ,விருதுநகர் ,சிவகங்கை ,திருநெல்வேலி ,கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

karur rain

நாளை மறுநாள் கடலூர், விழுப்புரம் ,காஞ்சிபுரம் ,சென்னை ,செங்கல்பட்டு, திருவள்ளூர் ,திருவண்ணாமலை ,ராணிப்பேட்டை ,திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய முதல் மிக கனமழை பெய்யக்கூடும். வருகிற 28ம் தேதி சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.