சென்னையில் இன்று ரெட் அலர்ட்; 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு!!

 
rain

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்  பெரும்பாலான இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி யின் காரணமாக சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்  எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  சென்னையில் நேற்று பிற்பகல் தொடங்கிய மழையானது,  இரவு முழுவதும் பரவலாக பெய்தது. சென்னை தியாகராய நகர், தேனாம்பேட்டை ,மெரினா, சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி, மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு மற்றும் கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது .அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழையும் காற்றும் வேகமாக வீசியது.

rain

இந்நிலையில் இன்று சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை .திருவள்ளூர் .காஞ்சிபுரம் .செங்கல்பட்டு .கடலூர் .விழுப்புரம். ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

rain

அத்துடன் கள்ளக்குறிச்சி, மதுரை ,சிவகங்கை ,விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திருச்சி ,கரூர், திண்டுக்கல் ,பெரம்பலூர், அரியலூர் ,திருவண்ணாமலை ,சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.