"தமிழகத்தில் 3 நாட்களுக்கு அதிகனமழைக்கு வாய்ப்பு" - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!!

 
rain

தமிழகம்,புதுச்சேரியில்  3 நாட்கள் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது .தற்போது சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை சற்று ஓய்ந்துள்ள  நிலையில் மீண்டும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளதுஅடுத்த 48 மணி நேரத்தில் வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

rain

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தெற்கு தமிழ்நாடு கடல் பகுதிகள் இடையே வரக்கூடும் என்றும் ஒரே மாதத்தில் 3-வது முறையாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நவ.24, 25,26 ஆகிய நாட்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், காரைக்கால், புதுச்சேரி, கேரளாவில் நவ.25-27ம் தேதி வரை அதி கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அத்துடன் இன்று மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.