குரங்கு அம்மை தொற்று- மத்திய அரசு சிறப்பாக கையாள்கிறது: அமைச்சர் மா.சு.
குரங்கு அம்மையை தடுக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு சிறப்பாக கையாள்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “குரங்கு அம்மையை தடுக்கும் நடவடிக்கையை மத்திய அரசு சிறப்பாக கையாள்கிறது. பாகிஸ்தானில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தீவிரமாக கண்காணிக்கிறோம் உலகம் முழுவதும் பாதிப்புகள் பரவலாகி வருகிறது. விமானம், கப்பலில் வருபவர்களை கண்காணிக்கிறோம். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 10 படுக்கை கொண்ட குரங்கு அம்மை சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு்ள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை. அரசு பொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் குரங்கம்மைக்கான பிரத்யேக படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. வெளிநாட்டில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும் பணி, பன்னாட்டு விமான நிலையங்களில் நடக்கிறது” என்றார்.