முதல்வர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறது மத்திய குழு!

 
ttn

வடகிழக்கு பருவ மழையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் சேதமடைந்ததுடன் வீடுகளும் இடிந்து நாசமாகின. அத்துடன் கால்நடைகள் வெள்ளத்தில் அடுத்து செல்லப்பட்டன .இது தொடர்பாக ஆய்வு செய்ய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட உயர் அதிகாரிகள் குழு கடந்த 21ம் தேதி தமிழகம் வந்தது. இந்த குழு இரண்டாக  பிரிந்து ஆய்வு நடத்தினர்.  முதல் நாளான நேற்று முன்தினம் சென்னை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்புகளை பார்வையிட்டது.  அத்துடன்  நேற்று மத்திய நிதியமைச்சக ஆலோசகர் ஆர்.பி. கவுல் தலைமையிலான குழுவினர் வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து ராணிப்பேட்டையில் ஆய்வு மேற்கொண்டனர். 

tn

அங்கு பாலாற்றின் கரையில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியை மத்திய குழு பார்வையிட்டதுடன் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களையும் ஆய்வு செய்தது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூபாய் 25 கோடி நிவாரணம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேசமயம் மற்றொரு குழுவினர் புதுச்சேரியில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து நாகை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு சேதமடைந்த நெற்பயிர்கள் ,  கால்நடைகள் பாதிப்பு , மனித உயிரிழப்புகள் , வீடு சேதம்,  விவசாய பாதிப்புகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தனர்.

ttn

கடந்த இரண்டு நாட்களாக சென்னை, கன்னியாகுமரி, வேலூர் ,ராணிப்பேட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய குழுவினரின் ஆய்வு செய்த நிலையில், முதலமைச்சர் மு க ஸ்டாலினை இன்று தலைமை செயலகத்தில் சந்திக்கின்றனர்.  இதையடுத்து  டெல்லி சென்று மத்திய அரசிடம் தங்களது அறிக்கையை மத்திய குழு சமர்ப்பிக்க உள்ளனர். அதன் அடிப்படையில்தான் தமிழகத்திற்கு மழை வெள்ள நிவாரண தொகை  மத்திய அரசு அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.