சிவசங்கர் பாபாவிடம் விடிய விடிய விசாரணை!

 

சிவசங்கர் பாபாவிடம் விடிய விடிய விசாரணை!

சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா அங்கு படித்து வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் இந்த வழக்கு சிபிசிஐடி கைவசம் மாறிய நிலையில் அவர் டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

சிவசங்கர் பாபாவிடம் விடிய விடிய விசாரணை!

இதையடுத்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் சிறையில் அடைக்கப்பட்ட சில மறுநாளே அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்த பிறகு நேற்று முன்தினம் அவர் புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.

சிவசங்கர் பாபாவிடம் விடிய விடிய விசாரணை!

சிபிசிஐடி நேற்று சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதி தமிழரசி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபாவை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அனுமதி கோரிய நிலையில் வருகின்ற 30ஆம் தேதி வரை அதாவது மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.இந்நிலையில் 3 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது நாளாக விடிய விடிய விசாரணை நடத்தினர். அத்துடன் சிவசங்கர் பாபாவை அவர் பள்ளியில் உள்ள அறைக்கு அழைத்து சென்று விசாரிப்பார்கள் என்று தெரிகிறது.