மாணவர்களிடையே சாதி மோதல்! மகனை மட்டும் தப்பிக்கவிட்ட இன்ஸ்பெக்டர்?

 
நிர்வாணப்படுத்தி தாக்குதல்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் தனியார் பள்ளியில் மாணவர்கள் இடையே சாதி ரீதியிலான மோதல் ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிட மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்ட மாணவன் ராதாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளி மாணவர் பேரவை தலைவர் தேர்தல் தொடர்பாக ஒரு மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. மொத்தம் 7 மாணவர்கள் தாக்கிய நிலையில், 6 பேர் மட்டுமே சீர்திருத்தப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஒரு மாணவர் காவல் ஆய்வாளரின் மகன் என்பதால் நடவடிக்கை இல்லை என புகார் எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவன் அளித்த புகாரின் அடிப்படையில் 6 மாணவர்கள் சீர்திருத்தப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். அதில் 
காவல்துறை ஆய்வாளர் ஒருவரின் மகன் நீங்கலாக ஆறு மாணவர்கள் மட்டும் ஆஜர்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.