விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரூ.1,001- அர்ஜூன் சம்பத் மீது வழக்குப்பதிவு

 
விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் விடுத்ததாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Arjun Sampath (@imkarjunsampath) / Twitter

விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு பரிசாக ரூ.1,001 வழங்கபடும் என ந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அர்ஜூன் சம்பத் பதிவு அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் இருப்பதாக கோவை மாநகர காவல் துறையினர் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 7.11.2021 ஆம் தேதியன்று, இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத், தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி “தேவர் அய்யாவை இழிவுபடுத்தியதற்காக அவரை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ.1,001 வழங்கப்படும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேற்படி, பதிவானது அமைதி மீறுதலை தூண்டும் உட்கருத்துடனும், குற்றமுறு மிரட்டல் விடுத்ததாகவும் உள்ளது. எனவே இதுதொடர்பாக இன்று 17.11.2021 ஆம் தேதி, பி1 கடைவீதி காவல் நிலைய குற்ற எண்- 633/2021, u/s 504, 506(i) ஐபிசியின் படி அர்ஜூன் சம்பத் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது