மத்திய அமைச்சர் ஷோபா மீதான வழக்கு ரத்து

 
மத்திய அமைச்சர் ஷோபா

பெங்களூரு ராமேஸ்வரம் காஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மன்னிப்புக்கேட்டதையடுத்து அவர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மக்களிடம் மன்னிப்பு: மத்திய அமைச்சர் ஷோபா உயர் நீதிமன்றத்தில்  பிரமாணப் பத்திரம் தாக்கல் | Rameshwaram Cafe issue Shoba Karandalaje filed  an affidavit in the HC ...

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலகலத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி  இணை அமைச்சர் ஷோபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.  இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது, இணையமைச்சர் தரப்பில், பெங்களூரு ராமேஸ்வரம் காஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் தமிழ்நாடு மக்களிடம் மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 

தமிழர்கள் குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி. எஸ்.ராமன், இணை அமைச்சர் ஷோபா மன்னிப்புக்கோரியதை தமிழக மக்கள் சார்பாக அரசு ஏற்றுக்கொள்வதாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மத்திய இணையமைச்சர் ஷோபா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.