சீமானுக்கு அடுத்த சிக்கல்- வழக்கு தொடர்ந்தார் எஸ்பி வருண்குமார்

 
ச்

திருச்சி எஸ்பி வருண்குமார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சீமான் மீது வழக்கு பதிய எஸ்சி எஸ்டி ஆணையம் உத்தரவு! - Seeman

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இது குறித்து எஸ் பி வருண்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். அந்த புகாரின் அடிப்படையில் சீமான் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசியது தொடர்பாக விளக்கம் கேட்டு திருச்சி எஸ்பி வருண்குமார் சார்பில் சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த வக்கீல் நோட்டீஸிற்கு உரிய பதில் சீமான் அளிக்கவில்லை, மேலும் தொடர்ந்து அவதூறாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருண் குமார் குறித்து அவதூறாக பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி எஸ்பி வருண்குமார் சார்பில் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 4-ல் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை வரும் 30ஆம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், அன்றைய தினம் திருச்சி எஸ்பி வருண் குமார் நேரில் ஆஜராகி தன்னுடைய விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும் குற்றவியல் நீதிமன்ற எண்-4 நீதிபதி பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

சீமான் மீது வழக்கு தொடர்வேன் மனைவியுடன் எக்ஸ் தளத்தில் இருந்தும்  வெளியேறினார் திருச்சி எஸ்.பி., அறிவிப்பு

இது குறித்து பேசிய வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன், “திருச்சி எஸ் பி வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் அவதூறான கருத்துக்களை பேசி வந்த சீமானிற்கு விளக்கம் கேட்டு ஏற்கனவே வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பாசறை என்கிற பெயரில் ஒரு வழக்கறிஞர் பதில் அனுப்பி இருந்தார். அதில் என்ன கேள்வி கேட்டோமோ, அதற்கு உரிய விளக்கம் அளிக்காமல் திசை திருப்பும் வகையில் பல்வேறு பதில்கள் இருந்தது. எனவே தான் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். தற்பொழுது அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி தெரிவித்துள்ளார். வரும் 30ஆம் தேதி திருச்சி எஸ்பி வருண்குமார் நேரில் ஆஜராகி தன்னுடைய விளக்கத்தை அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த வழக்கு நடைபெறும். அடுத்த கட்டமாக சீமான் நேரில் ஆஜராக நீதிமன்றம் மூலமாக சம்மன் அனுப்பப்படும், அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து வழக்கு விசாரணை முடிவடைந்த பின் நீதிபதி உத்தரவிடுவார். நேர்மையான அதிகாரியாக சமூகத்தில் நன்மதிப்புடன் உள்ள எஸ்பி வருண்குமார் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வரும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.