சாலையில் சென்று கொண்டிருந்தபோது பற்றி எரிந்த கார்.. நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 9 பேர்..

 
car fire

திருவள்ளூர் மாவட்டம் பெருவாயல் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து ஒரு குடும்பத்தினர், தங்களது குலதெய்வம் கோயிலுக்குச் செல்வதற்காக காரில் சென்றுள்ளனர். சென்னை- கொல்கத்தா சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கவரப்பேட்டை அருகே திடீரென கார் எஞினிலிருந்து புகை வந்துள்ளது. உடனடியாக காரை நிறுத்திய உரிமையாளர். கிழே இறங்கி பார்த்துள்ளார்.

car fire

அப்போது எதிர்பாராத விதமாக கார் தீப்பிடித்து. இதனையடுத்து காரிலிருந்த 2 குழந்தைகள் உள்பட 9 பேரும்  அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர். மேலும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். கார் கொழுந்துவிட்டு மளமளவென எரியத்தொடங்கியது. கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னெரி தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த வீர்ர்கள் தீயை அணைத்தனர்.

உடனடியாக காரிலிருந்து அனைவரும் வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருந்தபோதிலும் சாலையில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் வாகன ஓட்டிகளை அச்சமடையசெய்துள்ளது.