சென்னை ஹார்பரை நடுங்கவிட்ட இரவு- கடலுக்குள் பாய்ந்த கார்! டிரைவர் மாயம்

 
ச்

சென்னை துறைமுகத்தில் கடலோர காவல்படை அதிகாரியுடன் கடலில் மூழ்கிய கார் மீட்கப்பட்ட நிலையில், ஓட்டுநரை தேடும் பணி நடைபெற்றுவருகிறது.

சென்னை துறைமுகத்தில் பணிபுரிந்து வரும் கடலோர  காவல் படை வீரர்களை வேலைக்கு அழைத்துச் செல்ல தனியார் டிராவல்ஸ் மூலம் கார் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று இரவு தனியார் டிராவல்ஸ் டிரைவர் கொடுங்கையூரை சேர்ந்த முகமது சகி(32) என்பவர் துறைமுகத்தில் கடலோர காவல் படை வீரர் ஒருவரை அழைத்துக் கொண்டு சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த கார், கடலில் விழுந்தது. இதில் உடனடியாக கடலோர காவல் படை வீரர் கதவைத் திறந்து தப்பித்து வந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கார் டிரைவர் தற்போது வரை கிடைக்கவில்லை. 

85 அடிக்கு கீழ் ஆழம் அதிகம் உள்ள காரணத்தால் கார் மிகப்பெரிய சவாலுக்கு பின் மீட்கப்பட்டது. தொடர்ந்து டிரைவரை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து துறைமுகம் காவல் உதவி ஆணையர் ராஜசேகர் உத்தரவின் பெயரில் துறைமுகம் காவல் ஆய்வாளர் சிலம்பு செல்வன் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் துறைமுகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.