திட்டமிட்டபடி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்! ஸ்தம்பிக்க போகும் போக்குவரத்து

 

திட்டமிட்டபடி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்! ஸ்தம்பிக்க போகும் போக்குவரத்து

திட்டமிட்டபடி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த சூழலில் பிப்ரவரி. 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

திட்டமிட்டபடி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்! ஸ்தம்பிக்க போகும் போக்குவரத்து

நாளை முதல் நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தில், 95% தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனிடையே நாளை முதல் நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டு பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
எடுக்கப்படும் எனவும் ஏற்கனவே விடுப்பு எடுத்திருந்தாலும், நாளை கண்டிப்பாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.