சென்னையில் பேருந்து கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி, 10 பேர் காயம்
Sep 16, 2024, 18:20 IST1726491011915
சென்னையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகினர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
சென்னை மதுரவாயல் அருகே மாநகர பேருந்து சர்வீஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. செங்குன்றத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்தில் சிக்கியது. சர்வீஸ் சாலையில் சென்ற ஆட்டோ மீது பேருந்து கவிழ்ந்ததில் ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் உயிரிழந்தார். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
சென்னை, மதுரவாயல் சுங்கச்சாவடி அருகே சென்றுகொண்டிருந்த பேருந்து மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. பாலத்தில் இருந்து கீழே ஆட்டோ மீது பேருந்து விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.