#BREAKING ஈரோட்டில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!!

 
school leave school leave

 தொடர்மழை காரணமாக ஈரோடு  மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
தமிழகத்தில் கடந்த 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  ஆரம்பமே வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  இதனிடையே வடக்கு அந்தமான் - மத்திய கிழக்கு வங்கக்கடல்  பகுதியில் நிலவிவரும்  காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக  அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

Rain

 அதன்படி இன்று திருப்பூர், நீலகிரி, ஈரோடு,  கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது . அதற்கேற்ப ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.  இதன்காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் கன்காரா அறிவித்திருக்கிறார்.