#Breaking: தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு..
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை அவ்வப்போது விலை உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டிவந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே நிதர்சனம். மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரு 15 % லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை தடாலடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதற்கேற்ப கடந்த மாதம் மட்டும் ரூ.5,000 வரை தங்கம் விலையும் குறைந்தது.
தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம் என்கிற வகையில், அதிரடி ஏற்றங்களை கண்டு வருகிறது. அந்தவகையில் கடந்த சனிக்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ.840 அதிகரித்தது. அன்றைய தினம் ஒரு சவரன் ரூ.53,360க்கு விற்பனை செய்யப்பட்டது. வாரத்தின் முதல்நாளான திங்கள் கிழமை மாற்றமின்றி விற்பனையாது. தொடர்ந்து நேற்றைய திண்டம் சவரனுக்கு ரூ.80 குறைந்திருந்த நிலையில் இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.400 உயர்ந்திருக்கிறது.
சென்னையில் இன்று 2 2 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,710 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு 400 ரூபாய் அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் 53,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் 92 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலையேற்றம் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.