#Breaking: தமிழக மீனவர்கள் 37 பேர் கைது..!
தமிழ்நாடு மீனவர்கள் 37 பேரை 3 படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவதும் தொடர்கதையாகியுள்ளது. மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வுகாண வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் நாகை மற்றும் மயிலாடுதுறையில் இருந்து 3 படகுகளில் 37 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி 37 மீனவர்களையும் கைது செய்தது இலங்கை கடற்படை. கைது செய்யப்பட்ட 37 மீனவர்களும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீனவர் பிரச்சனைக்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவ சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.