சாதிமாறி காதல்- வீடு புகுந்து இளைஞரின் தாயை கடத்தி சென்ற பெண் வீட்டார்
தருமபுரி அருகே வீடு புகுந்து பெண்ணின் சேலையை இழுத்து, சரமாரியாக தாக்கி இழுத்துச் சென்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கீழ்மொரப்பூரில் வீடு புகுந்து 20 பேர் கொண்ட கும்பல் பெண்ணை கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கீழ்மொரப்பூரை சேர்ந்த செல்வன் - முருகம்மாள் தம்பதி மகன் சுரேந்தர், கோவையில் பணியாற்றிவருகிறார். அங்கு சுரேந்தரும், கணபதி பட்டியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது வீட்டிலும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சுரேந்தர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது காதலியுடன் தலைமறைவானார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் பெற்றோர் சுரேந்தர் வீட்டுக்கு புகுந்து சரமாரியாக தாக்கினர்.
இளம் பெண்ணின் உறவினர்கள்,சுரேந்தர் தாய் முருகம்மாளை அடித்து சேலையை பிடித்து தரதரவென இழுத்துகொண்டு கடத்தி சென்றனர். சுரேந்தரின் குடும்பத்தினர்
3 பேர் தாக்கப்பட்ட நிலையில், புகார் தொடர்பாக அரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.