சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு! வால்பாறையில் சோகம்
வால்பாறையில் சிறுத்தை தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஜாவலி மற்றும் ஷாஜிதா பேகம் தம்பதியரின் 5 வயது மகன் சைஃபுல் ஆலத்தை, ஐயர்பாடு எஸ்டேட்டில் வேலை செய்யும் இவர்களின் குடும்பம் வால்பாறை ஐயர்பாடி முதல் டிவிஷனின் ( ஜேஇ பங்களா ) தொழிலாளர் குடியிருப்பு பகுதியில்வசித்து வந்தது. மாலை சுமார் 7.15 மணியளவில் சிறுத்தை தாக்கி அந்த சிறுவனை தேயிலைச் செடிகளுக்குள் இழுத்துச் சென்றது. அருகிலுள்ள வீட்டில் வசித்த ஒரு தமிழ் பெண் அந்தச் சம்பவத்தை நேரில் கண்டுள்ளார்.
பெற்றோருக்கு 9 வயது சிறுவன், 7 வயது சிறுமி மற்றும் இந்த 5 வயது சிறுவன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். அதே நேரத்தில் வால்பாறை ADS குழு யானை கண்காணிப்பு பணியில் இருந்தது. கூட்டத்தின் அலறல் ஒலியைக் கேட்டதும் அவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தற்போது தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் புடலை மீட்ட பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் உயர்ந்து விட்டதாக தெரிவித்தனர் இதை அடுத்து சிறுவனின் உடல் வால்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.


