பாப்கார்ன் இயந்திரத்தின் சுவிட்ச் பாக்ஸில் கை வைத்த சிறுவன் உயிரிழப்பு

 
tt

 பாப்கார்ன் இயந்திரம் இணைக்கப்பட்டிருந்த சுவிட்ச் பாக்ஸில் கை வைத்த சிறுவன், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Death

திண்டிவனம்  அருகே  உறவினர் வீட்டிற்கு நிகழ்ச்சிக்காகச் சென்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலியாகியுள்ளார். நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பாப்கார்ன் இயந்திரம் இணைக்கப்பட்டிருந்த சுவிட்ச் பாக்ஸில் கை வைத்த மோத்திஸ் என்ற 5 வயது சிறுவன்  மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. 

tt

அருகிலிருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்குச் அழைத்துச் செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.