பூஸ்டர் தடுப்பூசி - முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!!

 
stalin

நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் இன்று தொடங்கவுள்ள நிலையில் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

booster

உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும் ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டு வரும் நிலையில் மூன்றாவது டோஸ் தடுப்பூசியின் தேவை தற்போது எழுந்துள்ளது.  இதன் காரணமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.  முதற்கட்டமாக முன் களப்பணியாளர்கள்,  60 வயதுக்கு மேலான முதியவர்கள், இணை  நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ttn

அதன்படி நாடு முழுவதும் இத்திட்டம் இன்று முதல் தொடங்குகிறது.  தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.  இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தகுதியானவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.  ஏற்கனவே  2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட தடுப்பூசியையே மூன்றாவது முறையும்  செலுத்திக் கொள்ள முடியும்.  தமிழகத்தை பொருத்தவரை 4 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி தடுப்பூசி  செலுத்தப்பட உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.