கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Jan 4, 2025, 09:55 IST1735964726535
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கவர்னர் மாளிகைக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் கவர்னர் மாளிகையிலும் குண்டு வெடிக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகையில் வழக்கமாக பலத்த பாதுகாப்பு இருந்தாலும், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.