தமிழக பாஜக மகளிர் அணியினர் ஆளுநருடன் சந்திப்பு...

 
BJP

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தமிழக பாஜகவை சேர்ந்த மகளிர் அணியினர் ஆளுநரை சந்தித்து பேசினர்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோ இந்த விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து பேசினர்.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தமிழக பாஜகவை சேர்ந்த மகளிர் அணியினர் ஆளுநரை சந்தித்து பேசினர். தமிழிசை சௌந்தரராஜன், ராதிகா சரத்குமார், குஷ்பூ உள்ளிட்ட ஏராளமான மகளிர் அணி நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்தனர்.